பெண்கள் விஷயத்தில் பரணி; காயத்ரியின் குற்றச்சாட்டை மறுத்த பிரபல நடிகர் - வீடியோ!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (15:22 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் நடக்கும் திருப்பங்களை பார்க்கும் போது அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆவல் வந்து விடுகிறது. அண்மையில் இந்த நிகழ்ச்சியில் கஞ்சா கருப்புவை தொடர்ந்து பரணி வெளியேற்றப்பட்டார்.

 
பிக் பாஸ் வீட்டில் பரணி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் விதிமுறைகளை மீறியதாக கூறி வெளியேற்றப்பட்டார். அதற்கு முன்பு காயத்ரி, பரணி இருக்கிற வீட்ல பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறினார்.
 
இந்நிலையில் இதுகுறித்து பிரபல சீரியல் நடிகர் அமீத் பார்கவ் வெளியிட்டுள்ள வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி  வருகிறது. அதில் கடந்த 2001ஆம் ஆண்டு அச்சம் தவிர் என்ற நிகழ்ச்சியில் பரணியுடன் ஒன்றாக பணியாற்றியுள்ளேன்.  பரணியைப் பற்றி எனக்கு தெரிந்தவரை யாரைப் பற்றியும் தப்பா பேசினதில்லை. பெண்கள் விஷயத்தில் ரொம்ப நல்லவர்.
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் பரணி இருக்குற வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காதுன்னு சொன்னாங்க, அது  என்ன ரொம்பவே பாதித்தது. எதை வைத்து அவரை தப்ப பேசினாங்கன்னு தெரியவில்லை. அவருக்கு மனைவி பிள்ளைகள் இருக்காங்க. இரு வீட்டில் இருப்பவர் எல்லாம் சேர்ந்து ஒருவரை ஒதுக்கினால் அவர் மன உளைச்சல் ஏற்படுவது  சாதாரணமானதுதான் என்று கூறியுள்ளார்.

 
அடுத்த கட்டுரையில்