தமிழ் திரை உலகை பொருத்தவரை தற்போது இரண்டு பிரபலங்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் நிலை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த வீரதீர சூரன் என்ற திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என்றும் அதே மாதத்தில் தான் ஜெயம் ரவி நடித்த ஜீனி திரைப்படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் மார்ச் 28ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
வீரதீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் தான் தற்போது வெளியாக உள்ளது என்றும் இதன் பின்னர் தான் முதல் பாகம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜெயம் ரவியுடன் கல்யாணி பிரியதர்ஷன் உள்பட மூன்று ஹீரோயின் நடித்துள்ள கலர்ஃபுல்லான படம் தான் ஜினி என்பதும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.