ஆட்சி மாற்றத்தால் தலைவி படத்துக்கு சிக்கல் வருமா? படக்குழுவினர் குழப்பம்!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (15:56 IST)
கங்கனா ரனாவத் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கி இருக்கும் திரைப்படமான தலைவி படத்தின் தமிழ் ரிலிஸுக்கு ஏதேனும் சிக்கல்கள் வருமா என்ற அச்சம் படக்குழுவினர் மத்தியில் உள்ளதாம்.

நடிகை கங்கனா நடிப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாறு தலைவி என்ற பெயரில் மூன்று மொழிகளில் உருவாகி ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலிஸ் இப்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் எப்படியும் அவரின் எதிர்க்கட்சியினரான திமுகவினரை மட்டம் தட்டி காட்சிகளை வைத்திருப்பார்கள். டிரைலரில் கூட சட்டசபையில் அவரின் சேலை உருவப்பட்டது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது. இதற்கிடையில் தேர்தல் முடிவுகள் வந்து ஆட்சிமாற்றம் நடந்துள்ள நிலையில் திமுக அரசால் படத்தின் ரிலிஸூக்கு ஏதேனும் சிக்கல் வருமா என்று படக்குழுவினர் அச்சத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்