அஜித் 62 படத்தில் இருந்து த்ரிஷா வெளியேற காரணம் இவர்தான்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (08:08 IST)
அஜித் 62 படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்ட திரிஷா இப்போது அந்த படத்தில் இருந்து நீக்கபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

துணிவு படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ள அஜித் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த படம் ஜனவரி இறுதியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அவரை நீக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் திரிஷாவின் வெளியேற்றத்துக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் முதலில் சமந்தா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தில் நடிப்பது சம்மந்தமாக படக்குழுவோடு ஏற்பட்ட ஈகோ காரணமாக வெளியேறினார். அதை மனதில் வைத்து இப்போது விக்னேஷ் சிவன் திரிஷா வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்