எனக்கு 'பை' சொன்னவங்க ஜெயிப்பாங்க: பரணி கூறியது யாரை?

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2017 (22:50 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய பரணி இன்று கமலுடன் கலந்துரையாடினார். அப்போது கமல் கேட்ட பல கேள்விகளுக்கு வெளிப்படையாக, கள்ளங்கபடம் இன்றி பரணி பதில் கூறினார். அவருடைய பதில் அனைவரையும் கவர்ந்தது.



 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் என்று கமல் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய பரணி, 'நான் வீட்டில் இருந்து வெளியேறியபோது ஒரே ஒரு குரல் மட்டும் 'பை பரணி' என்று கூறியது. அந்த குரல் ஜெயிக்கும் என்று கூறினார்.
 
பிக்பாஸ் வீட்டில் இருந்து பரணி வெளியேறியபோது அவருக்கு 'பை' சொன்ன ஒரே நபர் நடிகை ஓவியா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. நடிகையாக இருந்தாலும் ஓவியா, பிக்பாஸ் வீட்டில் நடிக்காமல் இயல்பாக இருந்து வருவதாக டுவிட்டர் பயனாளிகள் கடந்த சில நாட்களாகவே ஓவியாவை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்