பிளாஸ்டிக்குக்கு தடைங்குறீங்களே அப்ப அதுக்கும் தடையா? நடிகையின் சர்ச்சைப்பேச்சு

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (10:41 IST)
இந்தி நடிகை பூனம் பாண்டே, பிளாஸ்டிக் பொருட்களுக்கெல்லாம் தடை விதிக்கப்பட்டிருக்கே அப்ப அந்த பிளாஸ்டிக்குக்கும் தடையா என சர்ச்சை கேள்வியை எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிராவில் தற்பொழுது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் சர்ச்சைக்குப் பெயர்போன இந்தி நடிகை பூனம் பாண்டே ஏற்கனவே, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்தியா வென்றால், நான் நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவேன் எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி பல விமர்சனங்களுக்கு ஆளானார்.
அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு சர்ச்சைக் கருத்தை பேசியுள்ளார் அவர், மகாராஷ்டிராவில் தற்பொழுது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்தவர்கள் யாரும் ரோட்டில் சுற்றாதீர்கள் என்றும் அரசின் பிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் (காண்டம்) சேருமா? எனக் கேட்டுள்ளார். பூனம் பாண்டேவின் இந்த கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்