விஜய்யின் 'லியோ' பட 2 வது சிங்கில் ரிலீஸ் எப்போது?

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (16:28 IST)
விஜய்யின் ‘லியோ’ பட 2 வது சிங்கில் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், மாஸ்டர் படத்திற்குப் பின் லோகேஷ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ.

இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

இப்படத்தின் முதல் சிங்கில் வெளியாகி வைரலான நிலையில், இப்படத்தின் அடுத்த சிங்கில்  எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில்,  இப்படத்தின் 2 வது சிங்கில் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி அனிருத் இசையில், லியோ பட 2 வது சிங்கில் வெளியாகும் என தகவல் வெளியாகிறது.

லலித்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா உள்ளிட்ட  பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தகக்து.

மேலும், செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இசை வெளியீடு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்