கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வைரலானது.
இப்படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் அடுத்த அப்டேட் எப்போது வெளியயாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை இரண்டே நாட்களில் தனுஷ் பேசியதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், இப்படத்தின் இப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Our #CAPTAINMILLER is all set for a grand Release this PONGAL / SANKRANTI 2024