கத்திரி வெயிலாம்... ஃபுல் மேக்கப்புடன் தண்ணீருக்குள் வாய் பொளந்துக்கிட்டு போஸ் கொடுத்த ரம்யா!

Webdunia
சனி, 9 மே 2020 (20:02 IST)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது. ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார். மேலும், ஆடை படத்தில் அமலா பாலின் நெருங்கிய தோழியாக நடித்து லிப்லாக் சர்ச்சை காட்சியில் சிக்கினார்.

இதற்கிடையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம்  சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க கனவு காண்கிறேன் " என கூறி ஃபுல் மேக்கப் போட்டுகொண்டு தண்ணீருக்கள் மூழ்கிகிடக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dreaming away to escape from the Kathiri Veyyil

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்