உலக தரம் உள்ளூரு வாத்தியாரு.... வெளிநாட்டில் செதறவுடும் வாத்தி கம்மிங் - வைரல் வீடியோ!

Webdunia
சனி, 9 மே 2020 (19:37 IST)
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி சென்று விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என நம்பகுந்த வட்டாரத்தில் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது வாத்தி கம்மிங் பாடலுக்கு வெளிநாட்டினர் நடனமாடும் வீடியோவை Sony Music South நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வயதானவர்கள் முதல் இளசுகள் வரை சுமார்  10 பேர் கொண்ட குழு நடுரோட்டில் நின்று ரவுண்டு கட்டி ஆட்டம் போட்டுள்ள இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்