விவேகம் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (23:07 IST)
அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் மற்றும் பலர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க அனைவரும் ஆவலுடன் இருக்கும் நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது



 
 
இந்த நிலையில் இந்த படத்திற்காக இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்த பாடல்கள் வரும் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். முதல்முறையாக வியாழக்கிழமை செண்டிமெண்டை உடைத்து இந்த பாடல்கள் திங்கட்கிழமை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நெவர் எவர் கிவ் அப், வெறியாட, காதலாட, சர்வைவா, தலை விடுதலை என ஐந்து பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கையும் உடைய இந்த படத்தின் ஆல்பத்தை பெற இப்போதே முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
அடுத்த கட்டுரையில்