காதல், கல்யாணம் , விவாகரத்து , மறுமணம்... சொந்த வாழ்க்கை சர்ச்சையில் மீண்டு வந்த விஷ்ணு விஷால்!

Webdunia
சனி, 17 ஜூலை 2021 (11:26 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.
 
இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பரஸ்பர மனதுடன் விவாகரத்து செய்துக்கொண்டனர்.
 
காதலித்து கல்யாணம் செய்த மனைவியை பிரிந்த விஷ்ணு விஷால் போதைக்கு அடிமையானார். பின்னர் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் படவாய்ப்புகளையும் இழந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வந்து புதிய படங்களில் நடித்து ராட்சசன் போன்ற வெற்றிகளை கொடுத்தார். 
 
பின்னர் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலித்து மறுமணம் செய்துக்கொண்டார். இப்போது மகிழ்ச்சியான மன வாழ்க்கை வாழ்ந்து வரும் அவர் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று தனது 37வது பிறந்தநாள் கொண்டாடும் விஷ்ணு விஷாலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்