''விக்ரம் வேதா'' இந்தி படம் வெற்றியா? தோல்வியா? தயாரிப்பு நிறுவனம் தகவல்

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (14:55 IST)
விக்ரம் வேதா இந்தி ரீமேக் படத்திற்கு இன்று முதல்  வெளியாகி உள்ள நிலையில்,  இப்படம் விமர்சன ரீதியாகவும் பெரும்  வரவேற்பை பெற்றுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழில், மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர். விஜய்சேதுபதி கேரக்டரில் ஹிருத்திக்கும், மாதவன் கேரக்டரில் சயிஃப் அலிகானும்  நடித்துள்ளனர்.

விக்ரம், வேதா படத்தின்   டீசர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் 30 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில்,  இப்படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. 

சமீபத்தில் வெளியான இந்திப் படங்கள் தோல்வியுற்ற நிலையில், விக்ரம் வேதா பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தன் டுவிட்டர் பக்கதிதில்,  கிரிட்டிக் வெர்டிக், விக்ரம் வேதா வெற்றியாளன் என்று பதிவிட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டில் ரிலிஸான பாலிவுட் படங்கள் தோல்வி மற்றும் சரிவை சந்தித்த நிலையில், இப்படத்திற்கு 3க்கும் மேல் நட்சத்திர மதிப்புகளை ஊடகவியாளர்களும், விமர்சகர்களும் கொடுத்து வருகின்றனர். இதனால் இப்படத்தின் வெற்றியை படத் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்