2 பாடல்கள், 2 ஸ்டண்ட் காட்சிகள் மட்டுமே: ‘வாரிசு’ அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்

ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (18:23 IST)
தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிய இருப்பதாக செய்திகள் கசிந்த நிலையில் இந்த படத்தை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வாரிசு’ படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது 
 
‘வாரிசு’ படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளதாக இன்னும் இரண்டு ஆக்சன் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனை அடுத்து வாரிசு படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் ‘வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 வம்சி இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்