நடிகர் விக்ரம் திரைத்துறையில் தனது 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக உள்ளவர் விக்ரம். ஆரம்பத்தில் விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்த விக்ரம் 1990ல் என் காதல் கண்மணி படத்தின் மூலமாக சினிமாவிற்குள் நுழைந்தார்.
அன்று தொடங்கு பல்வேறு கதாப்பாத்திரங்களில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் விக்ரம். பல விருதுகளையும் வென்றுள்ள விக்ரன் திரையுலக பயணத்தை தொடங்கி இன்றுடன் 32 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விக்ரம் “இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே. இந்த 32 வருடத்துக்கு நன்றி. & Abhinandan KK. Thank you for your lovely edit.” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவரது திரை வாழ்க்கை குறித்த ஸ்பெஷல் எடிட் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
Edit By: Prasanth.K
இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே.