விக்ரம் - பா ரஞ்சித் படத்தின் படப்பிடிப்பு எப்போது? படக்குழுவினர் தகவல்!

வெள்ளி, 14 அக்டோபர் 2022 (13:49 IST)
விக்ரம் நடித்த கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆன நிலையில் அடுத்ததாக அவர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்
 
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 18ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
 
முதல் கட்ட படப்பிடிப்பை ஆந்திராவில் உள்ள கடப்பாவில் தொடங்க பா ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும் 15 நாட்கள் ஆந்திராவிலும் அதனை அடுத்த அடுத்த கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
விக்ரம் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு படப்பிடிப்பு தொடங்கும் தேதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
பா ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது என்ற படம் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில் விக்ரமுடன் இணைந்து உள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்