ஸ்கெட்ச் - முன்னோட்டம்

Webdunia
வியாழன், 11 ஜனவரி 2018 (19:40 IST)
விக்ரம் நடிப்பில், விஜய் சந்தர் இயக்கியுள்ள ‘ஸ்கெட்ச்’ படம் பொங்கல் வெளியீடாக நாளை ரிலீஸாகிறது. ‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஸ்கெட்ச்’. விக்ரம் ஹீரோவாக நடிக்க, தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோயினாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். சூரி, ராதாரவி, வேல.ராமமூர்த்தி, ரவிகிஷண், ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீமன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
 
எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, எஸ்.தமன் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தை வெளியிடுகிறார். ஆக்‌ஷன் திரில்லர் படமாக இது உருவாகியிருக்கிறது. வடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், மெக்கானிக்காக நடித்துள்ளார் விக்ரம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்