விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. கீர்த்தி சுரேஷ், இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக நடித்துள்ளார். கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், கலையரசன், நந்தா, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, ஆனந்தராஜ், சத்யன், சிவசங்கர், வினோதினி, பிரம்மானந்தம், சுரேஷ், சுதாகர் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் கதையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.