விக்ரம் படத்தின் கதாபாத்திரங்கள் பற்றி கசிந்த தகவல்… படக்குழு அப்செட்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:03 IST)
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் வில்லன்களாக நடித்து வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளம் இசைப்புயல் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது என்பது தெரிந்ததே. 

இப்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்தைப் பற்றிய புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி இருவருமே படத்தில் வில்லனாக நடிக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் பஹத் பாசில் அஜித் குமார் என்ற கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி சூல கருப்பன் என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்களாம். இது பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்திருந்த படக்குழு எப்படி தகவல் கசிந்தது என்று அப்செட்டில் உள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்