போலி துப்பாக்கியால் சுட்ட நடிகர்…படப்பிடிப்பு தளத்தில் பெண் ஒளிப்பதிவாளர் பலி!

வெள்ளி, 22 அக்டோபர் 2021 (11:42 IST)
ரஸ்ட் என்ற ஆங்கில படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் போலி துப்பாக்கி என நினைத்து சுட்டத்தில் ஒளிப்பதிவாளர் பலியாகியுள்ளார்.

நடிகர் அலெக் பால்ட்வின் நடிப்பில் உருவாகி வரும் 'ரஸ்ட்'. இவர் மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் போலியாக வைக்கப்பட்டு இருந்த துப்பாக்கி என நினைத்து பால்ட்வின் சுட்டதில் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சினஸ் மேல் குண்டு பாய்ந்து அவர் பலியாகியுள்ளார்.

இந்நிலையில் போலியான துப்பாக்கியில் இருந்து எப்படி குண்டு வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்