’விக்ரம்’ படத்தின் இந்தி டப்பிங் உரிமை இத்தனை கோடியா?

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (21:47 IST)
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை அறிவோம்
 
இந்த படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக கமல்ஹாசனும் வில்லனாக விஜய் சேதுபதியும் விஞ்ஞானியாக பகத் பாசிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்கள் மட்டுமே நடந்துள்ள நிலையில் இந்தி டப்பிங் உரிமை வியாபாரம் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கோல்ட்மேன் மைண்ட் என்ற நிறுவனம் ’விக்ரம்’ படத்தின் இந்தி டப்பிங் உரிமையை ரூபாய் 31 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 70 கோடி என்று கூறப்படும் நிலையில் கிட்டத்தட்ட பாதி பட்ஜெட்டில் இந்தி டப்பிங் உரிமை மட்டும் விற்பனையாகியுள்ளது கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்