ஷங்கர், விஜய் படத்தை உறுதி செய்த விக்ரம் !

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (10:19 IST)
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பற்றி நடிகர் விக்ரம் நேர்காணல் ஒன்றின் போது பதிலளித்துள்ளார்.

விக்ரம், அக்சராஹாசன் நடிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கிய 'கடாரம் கொண்டான்' திரைப்படம் ஜூலை 19 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனால் இந்தப் படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடாரம் கொண்டான் சம்மந்தமாக கேரளாவில் ஒரு விழாவில் கலந்துகொண்ட அவர் ரசிகர்களின் பலகேள்விகளுக்குப் பதில் அளித்தார். அதில் ஒருக் கேள்வியாக ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக எப்போது நடிப்பீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விக்ரம் ‘ இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பேன். ஆனால் அவர் அதற்கு முன்பு விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்’ எனக் கூறியுள்ளார்.

விஜய் நடிப்பில் ஷங்கர் முதல்வன் 2 –ஐ இயக்க உள்ளதாக கோலிவுட்டில் கடந்த சில மாதங்களாக உலாவரும் செய்தியை விக்ரம் இப்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்