கோப்ரா படத்துக்கு வெளிநாடுகளில் மரண அடி… விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (17:43 IST)
கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

விக்ரம் நடித்த ‘கோப்ரா’  திரைப்படம் வரும் 31-ஆம் தேதி ரிலீஸான நிலையில் மோசமான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்த நிலையில் 20 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பெரும் பொருட்செலவில் உருவான கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. முதல் நாளில் சுமார் 7 முதல் 9 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் அதற்கடுத்த நாட்களில் வசூல் சுத்தமாக படுத்துவிட்டதாம். இதனால் அடுத்தடுத்த நாட்களில் 3 கோடி ரூபாய் வசூலைக் கூட தாண்டவில்லை என சொல்லப்படுகிறது. முதல் 3 நாட்களில் சுமார் 13 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படம் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல வெளிநாடுகளிலும் படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் வெளிநாடு விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் லலித்திடம் நஷ்ட ஈடு கேட்டு முறையிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. வேறு சிலரோ விஜய்யின் அடுத்த படத்தை லலித் தயாரிப்பதால் அந்த படத்தை வாங்கும் போது பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்