'விஜய்67' பட பூஜை வீடியோ ரிலீஸ்.. சமூக வலைதளங்களில் வைரல்

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (18:25 IST)
நடிகர் விஜய்யின் 67 பட பூஜை வீடியோ தற்போது  வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் விஜய்67.

இப்படத்தைல் லலித் மற்றும் ஜகதீஸ் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று  முன் தினம்  வெளியான நிலையில், இப்படத்தில்,  8 முக்கிய நடிகர், நடிகைக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி,  முதல் கட்டமாக இந்த படத்தில் நடிக்கும் சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூஸ், கௌதம் மேனன் மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று 14 ஆண்டுகளுக்குப் பின் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கவுள்ளார். இன்று அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு வெளியானது.

தென்னிந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பூஜை தொடக்க விழா நடந்தது.

இதன் வீடியோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்