தளபதி 67 படத்தின் ரிலீஸ் தேதியில் நடக்கும் முக்கிய மாற்றம்!

புதன், 1 பிப்ரவரி 2023 (15:02 IST)
விஜய் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் நிலையில் தற்போது காஷ்மீரில் ஷூட்டிங் நடந்து வருகிறது.

லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றி அவர் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக ஏற்றியுள்ளது. விக்ரம் படத்துக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.

இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. இப்போது காஷ்மீரில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ஒரு மாதம் முன்னதாகவே ஆயுதபூஜைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்