சுல்தான் படத்தை வாங்கிய முன்னணி தொலைக்காட்சி நிறுவனம்!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (15:50 IST)
கார்த்தி நடித்துள்ள சுல்தான் பட தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர். முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள புதிய ஸ்டில்கள் இப்போது வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் 8 கோடிக்குக் கைபப்ற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்