சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கும் படத்தை இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார், அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கு டான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா ஒப்பந்தமாகியுள்ளாராம். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் சூரி, பால சரவணன், முனீஸ்காந்த், புகழ் மற்றும் சிவாங்கி ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் பூஜையோடு தொடங்கி இப்போது கோயம்புத்தூரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சர்ப்ரைசாக நடிகர் சமுத்திரக்கனி இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனோடு ரஜினி முருகன் மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.