சென்னையில் இந்த இடத்தில்தான் விஜய்யின் GOAT படப்பிடிப்பு நடக்கிறதா?

vinoth
திங்கள், 8 ஜனவரி 2024 (07:51 IST)
விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின்  ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படத்தின் தலைப்பு “The greatest of all time” என்று வைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

தற்போது சென்னையின் கோவளம் பகுதியில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஜனவரி 23 ஆம் தேதி இங்கு ஷூட்டிங் நடக்க உள்ளதாகவும், அதன் பின்னர் ராஜஸ்தானில் அடுத்தகட்ட ஷூட்டிங் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்