கமல் நடிக்க வேண்டிய படத்தில் விஜய் சேதுபதி! இயக்குனர் யார் தெரியுமா?

Webdunia
புதன், 6 மே 2020 (09:46 IST)
கமல் நடிக்க இருந்த தலைவன் இருக்கின்றான் என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல் அரசியல் நுழைவுக்குப் பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாக அறிவித்தார். ஆனாலும் அதற்கு முன்னதாகவே அறிவித்த இந்தியன் 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் அதற்கு அடுத்து தனது இயக்கத்தில் தலைவன் இருக்கின்றான் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார். அந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராகவும், நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது தலைவன் இருக்கின்றான் படத்தில் கமலுக்கு பதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பார் என்றும், கமல் கௌரவ் வேடத்தில் மட்டுமே நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இதை உறுதிப் படுத்தும் விதமாகவே தற்போது விஜய் சேதுபதி கமலை ஆன்லைன் மூலமாக ஒரு நேர்காணல் நடத்தினார் என சொல்லப்படுகிறது. மேலும் முன்னர் தலைவன் இருக்கின்றான் படத்தை லைகா தயாரிக்க இருந்த நிலையில் தற்போது கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்