கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த ஒரு மாத காலமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக செயல்படாமல் இருந்த டாஸ்மாக் கடைகளை மே 7 முதல் திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பிற்கு பல அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசின் இந்த செயல்பாடு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் ” கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.” என விமர்சித்துள்ளார்.