திடீரென விஜய் சேதுபதியின் பழைய படங்களுக்கு டிமாண்ட்… எதனால் தெரியுமா?

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (10:22 IST)
விஜய் சேதுபதி நடித்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை இப்போது வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி பல இடங்களில் விஜய்யை விட அதிகமாக ஸ்கோர் செய்தார். இதனால் விஜய் ரசிகர்களே கூட விஜய் சேதுபதியின் புகழ்பாட தொடங்கினர். இந்நிலையில் தமிழைத் தவிர பல மொழிகளில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் அவர் வில்லனாக நடித்த உப்பேனா என்ற திரைப்படம் ஆந்திராவில் இதுவரை 28 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். மேலும் ஒட்டுமொத்தமாக 60 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் நாயகனுக்கு இதுதான் முதல்படம். ஆந்திராவில் ஒரு அறிமுக நாயகனின் படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்புக் கிடைத்ததில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் விஜய் சேதுபதிக்கென்று அங்கே தனியே ஒரு மார்க்கெட் உருவாகியுள்ளது. இதனால் அவரின் பழைய படங்களை வாங்கி டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர். அதில் முதல் படமாக 2019 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை நல்ல தொகைக்கு விலை போயுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்