இந்த மாநிலங்களில் இருந்து வந்தால் தனிமைப்படுத்துதல் கட்டாயம்! தமிழக அரசு அறிவிப்பு!

வியாழன், 25 பிப்ரவரி 2021 (08:22 IST)
கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இப்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் இப்போது கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்