மேற்குத் தொடர்ச்சி மலை வரும் 24ம் தேதி ரிலீஸ்: விஜய்சேதுபதி அறிவிப்பு

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (09:33 IST)
தன்னை வாழவைத்த மண்ணின் கதையான, மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மலைப்பகுதியில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக  மேற்குத் தொடர்ச்சி மலை என்ற படத்தை லெனின் பாரதி இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.  நடிகர் விஜய் சேதுபதி தயாரித்துள்ளார்.
 
படத்தில் தேனி அந்தோணி ராஜ் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் காயத்ரி கிருஷ்ணா, அபு வலையன்குளம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
எளிம மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இப்படம் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது.
 
சமீபத்தில் இப்படம் குறித்து வீடியோ வெளியிட்ட விஜய்சேதுபதி, இந்த படம் எளிய மக்களுக்கான படம். ரொம்ப அழகா வந்திருக்கு, என்னை பொறுத்தவரைக்கும் இந்த மாதிரி படம் செய்ததில்லை. ஆத்ம திருப்தியோடு இருக்கிறேன். இந்த படத்தின் கதையை கேட்டு இசையமைத்து கொடுத்த இசைஞானி இளையராஜாவிற்கு நன்றி. படம் உங்களிடம் நிறைய பேசும்” என்று தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இப்படம் இம்மாதம் 24 - ம் தேதி ரிலீசாகும் என்று விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்