விஜய் சேதுபதி சரியான கஞ்சன் ஜங்கா: இயக்குனர் தகவல்!!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (12:23 IST)
விஜய் சேதுபதியை வைத்து ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கியவர் கோகுல். இவருடைய அடுத்த படத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.


 
 
மீண்டும் விஜய் சேதுபதி கோகுல் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருகிறார். அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், இப்படத்திற்கு கஞ்சன் ஜங்கா என்று பெயர் வைக்கப் போவதாகவும், படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் ஜங்கா எனவும் தெரிய வந்துள்ளது. 
 
படத்தில் இவர் யாருக்கும் எதுவும் கொடுக்காத மகா கஞ்சனாக நடிக்கவுள்ளதால் கஞ்சன் ஜங்கா என்ற பெயரை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்