நடிகர் விஜய்சேதுபதி- கத்ரினா கைப் நடிப்பில் உருவாகியுள்ள மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி – கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெரி கிறிஸ்துமஸ்.
இடத்தை அந்தாதூன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாகவுள்ள இப்படத்தில், ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்து ஒரு புதிய போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளனர். இது வைரலாகி வருகிறது.