விஜய் சேதுபதியை பார்த்து அலறி ஓடிய ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (13:03 IST)
தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில படங்கள்  மட்டுமே இயக்கியிருந்தாலும் அத்தனை படங்களும் வித்யாசமான கதையம்சத்தில் அற்புதமான படைப்புகளாக கொடுத்தவர் இயக்குனர் ஜனநாதன். அந்தவகையில் அவரது இயக்கத்தில் வெளிவந்த  இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என அத்தனை படங்களும் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். 

 
இந்த அற்புத படைப்பாளி தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து "லாபம் " என்ற படத்தை இயக்கிவருகிறார். நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் டேனியல் பாலாஜி, கலையரசன், ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.     டி. இமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். 7சிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய்சேதுபதி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்நிலையில் லாபம் படத்தில் விஜய் சேதுபதியின் மிரட்டலான தோற்றம் ஒன்று இணையத்தில் வெளியாகி வேற லெவலில் வைரலாகி வருகிறது. இந்த விசித்திர கெட்டப்பில் விஜய் சேதுபதியை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகிவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்