ஓடிடியில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (21:46 IST)
ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ஒரு சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி இருக்கும் நிலையில் அவருடைய அடுத்தப் படமும் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாநகரம் என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் மும்பைகார்.
 
இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் விக்ராந்த் மாசே ஆகியோர் நடித்து இருந்தனர் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படம் ஜியோ மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில்  நேரடியாக ஒளிபரப்பப்பாகும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்