மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மைக்கேல் என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.
சந்தீப் கிஷான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் மேலும் முக்கிய கேரக்டரில் கௌதம் மேனன் வரலட்சுமி உள்ளிட்ட பல நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் உருவான இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்ட விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படம் நிச்சயம் விஜய் சேதுபதிக்கு இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பெண்ணிற்காக தான் இதையெல்லாம் செய்கிறாயா என்று கேட்கும் போது சந்தீப் கிஷா, ஒரு பெண்ணிற்காக இதையெல்லாம் செய்யவில்லை என்றால் அவன் எதற்காக இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்று கூறும் வசனத்துடன் இந்த ட்ரைலர் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.