இந்தி படிக்கவேண்டாம் என சொல்லவில்லை… திணிக்கவேண்டாம் என்றுதான்… விஜய் சேதுபதியின் கருத்து!

vinoth
திங்கள், 8 ஜனவரி 2024 (07:40 IST)
தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம்  ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர். அவர் இயக்கிய பட்லாபூர் மற்றும் அந்தாதூன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதிலும் அந்தாதூன் உலகளவில் புகழ் பெற்ற படமாக மாறியது. இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்போது அவர் விஜய் சேதுபதி மற்றும் காத்ரினா கைஃப் ஆகியோர் நடிப்பில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் படத்தின் பின்  தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. படத்தில் தமிழ் பேசும் நபராகவே விஜய் சேதுபதி நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இவரின் உரையாடல்களை காத்ரினா கைஃபுக்கு மொழி பெயர்த்து சொல்லும் கதாபாத்திரத்தில் நடிகை தீபா வெங்கட் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இதையடுத்து இந்த படத்தின் ப்ரமோஷன் சென்னையில் நடைபெற்றது. அதில் விஜய் சேதுபதி, காத்ரினா கைஃப் மற்றும் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது விஜய் சேதுபதியிடம் பத்திரிக்கையாளர் “இந்தி தெரியாது போடா என சொன்னவர்கள் நாம். அப்படியிருக்க இந்தி படத்தில் நடிப்பது ஏன்?” எனக் கேட்க, அதற்கு கோபமாகி பதிலளித்தார் விஜய் சேதுபதி.

அவரது பதிலில் “எதுக்கு இப்ப இந்த தேவையில்லாத கேள்வி. அமீர் கான் சார் வந்தப்பவும் இந்த கேள்விய கேட்டீங்க.. யாருமே இந்தி படிக்க வேண்டாம்னு சொல்லல.. திணிக்க வேண்டாம்னுதான் சொன்னாங்க. இதுபத்தி நம்ம அமைச்சர் பி டி ஆர் சார் தெளிவா பேசி இருக்காரு” எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்