விஜய் சம்பளம் உண்மையிலேயே ரூ.120 கோடியா?

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (20:08 IST)
தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் சம்பளம் ரூபாய் 120 கோடி என்றும் ஒருசிலர் தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக விஜயின் உண்மையான ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் 
 
கோலிவுட் வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது தளபதி விஜய் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது அவருக்கும், அவருடைய ஆடிட்டருக்கும் தயாரிப்பாளருக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்றும் அதையும் யாராலும் ஊகிக்கவே முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது
 
எனவே விஜய்யின் சம்பளம் இத்தனை கோடி என்று வெளியாகும் செய்திகள் அனைத்துமே பொய்யானது என்றும் அவரது சம்பளம் எவ்வளவு என்பது குறித்து விஜய்க்கு மட்டுமே தெரியும் என்றும் கூறப்பட்டு வருகிறது. வேண்டுமென்றே தவறான தகவல்களை பரபரப்புக்காக சிலர் பரப்பி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்