விஜய்யின் ’’மாஸ்டர் ரெய்ட் ’’ பாடல்…. இன்று ரிலீஸ் ! ரசிகர்கள் ஹேஸ்டேக் டிரெண்டிங்

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (15:35 IST)
விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள மாஸ்டர் ரெய்ட் பாடல் தெலுங்கு வெர்சன் இன்று மாலை ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வரும் ஜனவரி 13 ஆம் தேதி இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதாகப் படக்குழு தெரிவித்த நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையேற்ற தமிழக அரசு சமீபத்தில் திரையரங்கில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த சினிமா துறையினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், மாஸ்டர் படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதால் ஏற்கனமே சிட்டி ஸ்டோரி, பாடல் வெளியாகி வைரலான நிலையில், இன்று மாலை 7 மணிக்கு மாஸ்டர் ரெய்ட் பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள்  #MasterRaid  என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

மேலும், விஜய்யின் மாஸ்டர் படத்தின் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் நேற்றுடன் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதேசமயம் இப்பாடலின் வீடியோ பிரமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்