கமல் ரூட்டில் செல்லும் விஜய் – பல ஆண்டுகளுக்குப் பிறகு எடுத்த முடிவு!

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (16:07 IST)
பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் இப்போது முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகள் கொண்ட படத்தில் நடிக்க உள்ளாராம்.

நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் வசூல் சூப்பர் ஸ்டாராக உள்ளார். தமிழ்நாட்டு அளவில் ரஜினியை சில ஆண்டுகளுக்கு முன்னரே அவரும் அஜித்தும் தாண்டிவிட்டனர் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய் மாஸ்டர் படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்திருந்தார். திடீரென அந்த படத்தில் இருந்து முருகதாஸ் விலகிவிட்டதால் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் அந்த படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார்.

விஜய் மாஸ் ஹீரோ ஆன பிறகு அவர் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஆனால் அவர் படங்களில் ஆங்காங்கே சில காமெடிக் காட்சிகள் இருக்கும். இந்நிலையில் சச்சின் படத்துக்கு பிறகு இப்போது தளபதி 65 படம் அதிகளவில் நகைச்சுவை காட்சிகள் கொண்ட படமாக உருவாக உள்ளதாம். மாஸ் ஹீரோக்களிலியே கமல் மட்டுமே அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்மந்தம் மற்றும் தெனாலி ஆகிய நகைச்சுவை படங்களில் தயங்காமல் நடிப்பார். அந்த வகையில் இப்போது விஜய் துணிந்து அந்த கதைகளத்தில் நடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்