நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் வசூல் சூப்பர் ஸ்டாராக உள்ளார். தமிழ்நாட்டு அளவில் ரஜினியை சில ஆண்டுகளுக்கு முன்னரே அவரும் அஜித்தும் தாண்டிவிட்டனர் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய் மாஸ்டர் படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்திருந்தார். அந்த படத்துக்காக முதலில் அவருக்கு 100 கோடி சம்பளம் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இடையில் கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் 20 கோடியை குறைத்துக் கொள்ள சொல்லி சன் பிக்சர்ஸ் கேட்டது.
இதற்கிடையில் முருகதாஸூம் படத்தை விட்டு விலகவே, அடுத்ததாக நெல்சன் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் படத்தின் அறிவிப்பை தாமதமாகவே வெளியிட்டனர். இதற்குப் பின்னணியில் விஜய்தான் இருந்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் தியேட்டர்கள் திறந்த பின்னர் பட அறிவிப்பை வெளியிட்டால்தான் சம்பளத்தைக் குறைக்க சொல்லி அழுத்தம் இருக்காது என்பதால் விஜய் தாமதப்படுத்தி உள்ளாராம்.