100 குடும்பங்களுக்கு உதவிய விஜய் மக்கள் இயக்கம்

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (21:08 IST)
விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வருகிறார் என சினிமா விமர்சர்கள் கூறி வரும் நிலையில் அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என ரசிகர்களும் அவ்வப்போது, பல மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
 

இந்த நிலையில்,  சென்னை, தி நகரில் கண்ணம்மாபேட்டை பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மழைக்காலத்தையொட்டி 3 கிலோ வீதம் 100  குடும்பங்களுக்கு வழங்கப்பட்டதாக மக்கள் இயக்கப் பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

’’தளபதி  விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க,

தென்சென்னைவடக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,

சென்னை தி.நகர் கண்ணம்மாபேட்டை பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மழைக்காலத்தையொட்டி 3-கிலோ வீதம் 100 குடும்பங்களுக்கு அரிசி பைகள் வழங்கப்பட்டது.!

இந்நிகழ்ச்சியில் பகுதி, வட்டம், கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்