என்ன தளபதி விஜய்னு போட்ருக்கு…? கவனம் ஈர்த்த அரசாணை!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (07:38 IST)
விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ள லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க லலித் குமார் தயாரித்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவை மேற்கொள்ள அனிருத் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

விஜய்யின் லியோ டிரைலர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. படத்தின் சென்சார் எல்லாம் முடிந்துவிட்டதாகவும், படத்தின் இரண்டாம் பாதிக்கான பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகள் மட்டும் இப்போது நடந்து வருவதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில் விஜய்யின் பெயரை குறிப்பிடும் இடத்தில் ‘தளபதி விஜய்’ எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது சமூகவலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்