2018ஆம் ஆண்டை மிஸ் செய்யும் தளபதி விஜய்

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (06:48 IST)
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவரது 62வது படத்தின் படப்பிடிப்பு வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளதாக தெரிகிறது.



 
 
இந்த நிலையில் 'தளபதி 62' திரைப்படம் 2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று ஒருசில செய்தி இணையதளங்களும், சமூக வலைத்தளத்தில் சிலரும் கூறி வந்தாலும் இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் தான் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'தளபதி 62' திரைப்படம் இதுவரை யாரும் தொடாத சப்ஜெக்ட் என்பதால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணி அதிகம் இருக்கும் என்றும் அதனால் ஒருவருட காலம் இந்த படம் முடிய காலம் எடுக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
எனவே விஜய்யின் 25 வருட சினிமா வரலாற்றில் 2018ஆம் ஆண்டு தான் அவருடைய படம் வெளிவராத ஆண்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்