#MasterEnters200CrClub: கொண்டாடும் தளபதி ரசிகர்கள்!!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (09:31 IST)
மாஸ்டர் படத்தின் வசூல் 200 கோடியை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 
விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் முதல் முறையாக இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியானது. 
 
தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் மாஸ்டர் திரைப்படம் இந்தியில் படுதோல்வி என்று சொல்லப்படுகிறது. வார விடுமுறை முடிந்துள்ள நிலையில் பல திரையரங்குகளில் மாஸ்டர் படத்தின் வசூல் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. 
 
இருப்பினும் மாஸ்டர் படத்தின் வசூல் 200 கோடியை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆம், உலகம் முழுவதும் மாஸ்டர் லாபம் 200 கோடியை எட்டியுள்ளதாம். இதனை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் #MasterEnters200CrClub என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும் 200 கோடியை எட்டும் விஜய்யின் 4வது படம் மாஸ்டர் என்று கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்