லியோ படத்தின் இதுவரையிலான பிஸ்னஸ் மட்டும் இத்தனை கோடியா?

Webdunia
திங்கள், 29 மே 2023 (07:31 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.

ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே இந்த படத்தின் பிஸ்னஸும் நடந்து வருகிறது. இதுவரை இந்த படத்தின் ஓடிடி, இந்தி டப்பிங் உரிமை, சேட்டிலைட் உரிமை ஆகியவை விறபனையாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த உரிமைகள் எல்லாம் இதுவரை விஜய் படத்துக்கு விற்பனை ஆகாத அளவுக்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுவரையிலான பிஸ்னஸ் மட்டும் சுமார் 400 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. இந்த தொகையால் விஜய்யின் அடுத்த படத்துக்கு அவருக்கு சம்பளமாக மிகப்பெரிய தொகை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்