கோட் படத்துக்கு அதிகாலை சிறப்புக் காட்சி அனுமதி கிடைக்குமா?

vinoth
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (09:21 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமாக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்துவது போல சமீபத்தில் கோட் படக்குழுவினர் விஜயகாந்த் குடும்பத்தினரை சென்று சந்தித்தனர்.

படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. இந்நிலையில் படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிகள் வேண்டி தமிழக அரசிடம் வினியோகஸ்தர்கள் விண்ணப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் இந்த சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்