விஜய்க்காக 10 ஆயிரம் வரிகள் கவிதை எழுதிய வெறித்தனமான ரசிகர்.. 36 மணி நேரத்தில் சாதனை..!

Siva
ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (10:01 IST)
திருப்பத்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் நடிகர் விஜய்க்காக 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகள் கொண்ட கவிதையை எழுதியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 
திருப்பத்தூர் அடுத்த ஜடையனூர் பகுதியை சேர்ந்தவர் கதிர். இவர் தீவிர விஜய் ரசிகரான இருந்து வரும் நிலையில் கடந்த 16-ஆம் தேதி நடிகர் விஜய்க்காக 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளுடன் முழு கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
 
ஏப்ரல் 16ஆம் தேதி காலை 11 மணிக்கு கவிதை எழுத தொடங்கிய கதிர், ஏப்ரல் 17ஆம் தேதி இரவு 11 மணி வரை 36 மணி நேரம் இடைவிடாமல் சுமார் 10 ஆயிரம் வரிகள் அடங்கிய ஒரு முழு கவிதையை எழுதி சாதனை படைத்துள்ளார். நடிகர் விஜய்க்காக கவிதை எழுதி சாதனை படைத்த கதிருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
இதனையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் ஃபியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் ஆகிய அமைப்புகளின் சார்பில், கில்லி திரைப்படத்தின் மறுவெளியீட்டு தினத்தன்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்